ஆலங்காயத்தில் உலக வன நாள் விழா
ஆலங்காயத்தில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வனச்சரக அலுவலகத்தில், உலக வன நாள் விழா வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. விழாவில், உலக அளவில் மாறிவரும் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்க மரங்கள் உதவுவதை வலியுறுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத் தலைவர் பூபாலன், ஆலங்காயம் பேரூராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.