எருமப்பட்டி அருகே விஷம் குடித்த விவசாயி சாவு
எருமப்பட்டி அருகே விஷம் குடித்த விவசாயி பலியானார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). விவசாயி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த ஆண்டு பெருமாள் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதனால் அவரது வலது கை செயலிழந்து விட்டது. வலது கை செயலிழந்ததால் பெருமாள் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த பெருமாள் விஷம் குடித்தார். தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பி வந்த செல்வி கணவர் விஷம் குடித்ததை அறிந்து பதறினார். பின்னர் உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை பெருமாள் இறந்தார். அவரது தற்கொலை குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.