நாமக்கல்லில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-21 17:14 GMT
நாமக்கல்:
ஆர்ப்பாட்டம்
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் செலவினங்களை வருகிற 31-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அடிப்படை மற்றும் நிலஅளவை பயிற்சி பெறாத நிலையிலும் கொரோனா தொற்று காரணமாக நிபந்தனை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். செயலாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகள்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்க பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 
மாவட்ட வருவாய் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகளை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் துணை தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்