கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-21 17:13 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட மையம் சார்பில் நேற்று மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமலட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தாசில்தார் ராஜலட்சுமி நன்றி கூறினார்.
தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குருநாதன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் மாவட்ட சங்க செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர். முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் அருள்மொழி நன்றி கூறினார். 
ஆர்ப்பாட்டத்தில் துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்க பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்ட வருவர் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகள் தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்