பரமத்திவேலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
பரமத்திவேலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
கல்லூரி மாணவர்
பரமத்திவேலூர் அருகே உள்ள பெரியகரசப்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகன் கவின் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மயக்கவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கவின் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதனை கவனித்த பெற்றோர் ஏன் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய்? என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் கவின் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று அவர் வீட்டில் திடீரென விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவில் கவின் பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் கவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.