திருப்பத்தூரில் அனுமதியின்றி இயங்கிய மாடு அறுக்கும் தொட்டி, தோல்கள் அகற்றம்

திருப்பத்தூரில் அனுமதியின்றி இயங்கிய மாடு அறுக்கும் தொட்டி, தோல்கள் அகற்றப்பட்டது.

Update: 2022-03-21 17:04 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் ஜார்ஜ் பேட்டை மற்றும் அபாய்தெருக்களில் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய்களில் மாட்டு ரத்தம் கலந்து வந்தது. இது குறித்து நகராட்சி தலைவர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் டவுன் 27-வது வார்டு சுல்தான்மியான் தெரு, அமீனுதீன் தெரு, சின்ன மதர் தெரு ஆகிய பகுதிகளுக்கு நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக், நகர அபிவிருத்தி அலுவலர் கவுசல்யா ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அனுமதியின்றி மாடு அறுக்கும் தொட்டியை அகற்றவும், மாட்டுத் தோல்கள், மாட்டு கழிவுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர் 

எந்தவித அனுமதியும் இன்றி இயங்கி வந்த மாடு அறுக்கும் தொட்டிகள் மற்றும் தோல் கழிவுகள், எலும்புகள் சேகரித்து வைக்கும் குடோன்களை மூட நகராட்சி அலுவலர்கள் உத்தரவிட்டனர். மாட்டுக் கறிகளை தெருக்களில் இருந்து 3 அடி தூரம் தள்ளி கண்ணாடி போட்ட அறைக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 

மேலும் கழிவு நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் வைத்து இடித்தனர். நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், சரவணன், நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்