சரவணம்பட்டி
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சி கைகோலபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
குரும்பபாளையத்தில் இருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி அருண் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் பலத்த காயமடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.