மது குடிப்பதை கண்டித்ததால் இந்தி சினிமா இயக்குனரின் மகன் தற்கொலை

மது குடிப்பதை கண்டித்ததால் மும்பையில் சினிமா இயக்குனரின் மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-21 12:45 GMT
கோப்பு படம்
மும்பை, 
மது குடிப்பதை கண்டித்ததால் மும்பையில் சினிமா இயக்குனரின் மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இயக்குனரின் மகன்
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஒபரோய் ஸ்பிரிங்ஸ் என்ற கட்டிடத்தில் இந்தி சினிமா இயக்குனர் கிரிஷ் மாலிக் வசித்து வருகிறார். இவர் சஞ்சய் தத் நடித்த தோர்பாஷ் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவரது மகன் மன்னான் (வயது18). சம்பவத்தன்று இயக்குனரின் மகன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். 
இந்தநிலையில் வீட்டுக்கு வந்த பிறகும் அவர் மது குடித்து உள்ளார். மேலும் அவர் தாயுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இயக்குனர் அம்மாவிடம் அமைதியாக பேசு, குடிப்பதை நிறுத்து என மகனிடம் அறிவுரை கூறியுள்ளார்.
மாடியில் இருந்து குதித்தார்
இந்தநிலையில் தனது அறைக்கு சென்ற மன்னான் ஜன்னல் வழியாக 5-வது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள கோகிலா பென் அம்பானி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இயக்குனரின் மகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். 
இதையடுத்து அவரது உடல் சித்தார்த் ஆஸ்பத்திரியில்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் இறுதி சடங்கிற்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டது. 
இந்த சம்பவம் குறித்து அம்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்