திருவள்ளூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

திருவள்ளூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2022-03-21 12:28 GMT
சென்னை, பட்டாபிராம், பாரதி நகர், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயந்த் (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நெமிலிசேரியிலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திருவள்ளூரை அடுத்த கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே செல்லும்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதினார். இதனால் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார்.

 இதையறிந்த திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்