வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி 3 நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
வடபழனி முருகன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். 2-வது நாளான நேற்று உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் மின்னொளியில் ஜொலித்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வேதபாராயணம், நாதஸ்வர கச்சேரியுடன் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3-வது நாள் தெப்பத்திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளுகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் கி.ரேணுகாதேவி ஆகியோர் செய்து உள்ளனர்.