செல்போன் திருடிய வாலிபர் கைது
சிந்துபட்டி பகுதியில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
சென்னை வடபழனியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஜெய விஜயதாரணி (வயது 20). இவர் கடந்த செப்டம்பர் 9-ந் தேதி காங்கேயம்நத்தம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டு செல்போன் பேசியுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். விலை உயர்ந்த செல்போன் என்பதால் சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா, செல்போன் ஐ.எம்.ஈ.ஐ.நம்பர் மூலம் செல்போன் திருடிய நபர் மதுரை முத்து மகன் மூர்த்தி ( 20) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிந்துபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.