அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி திடீர் சாவு

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி திடீரென உயிரிழந்தார்

Update: 2022-03-20 20:03 GMT
திருச்சி
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 40). இவர் தொட்டியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டு மணப்பாறை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நரம்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தினேஷை நேற்று முன்தினம் மாலை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி திடீரென இறந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்