மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-20 19:14 GMT
தோகைமலை, 
தோகைமலை அருகே உள்ள பொன்மன பண்ணைக்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சஸ்வந்த் (வயது 13). இவர் வேங்கடத்தான்பட்டியிலிருந்து கீழவெளியூர் செல்லும் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழவெளியூரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சிறுவனின் சைக்கிள் மீது மோதினார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சஸ்வந்த்தை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிறுவனின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்