4 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

கொள்ளிடம் அருகே 4 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

Update: 2022-03-20 18:37 GMT
கொள்ளிடம்:
 கொள்ளிடம் அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் தலைமையில்  ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 4 ஆயிரம் ஆலிவ் ரெட்லி குஞ்சுகள் விடப்பட்டன. இந்த ஆமை குஞ்சுகள்  8 ஆண்டுகள் கழித்து மீண்டும் மூட்டையிட இங்கு வரும் என வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார்மீனா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல், புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் வனத்துறையினர், போலீசார் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்