அதிக லாபம் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ7½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

அதிக லாபம் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-20 17:47 GMT
கிருஷ்ணகிரி:
அதிக லாபம் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆன்லைன் வர்த்தகம் 
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சாமண்டப்பட்டியை சேர்ந்தவர் சிவானந்த சுந்தரம் (வயது 28). ஆன்லைன் மூலம் டிரேடிங் வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த 13.7.2021 அன்று இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசினார்.
அப்போது அன்னிய செலாவணி வர்த்தக தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அந்த நபர் கூறினார். இதை நம்பி சிவானந்த சுந்தரம் அவரது கணக்கிற்கு ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் தொகையை அனுப்பினார்.
ரூ.7.62 லட்சம் மோசடி 
ஆனால் அந்த தொகையை பெற்று கொண்ட நபர், சிவானந்தசுந்தரத்தை ஏமாற்றி பணத்தை மோசடி செய்தார். இது குறித்து சிவானந்த சுந்தரம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தன்னை மணிகண்டன், கார்த்திக் ஆகிய 2 பேர் சேர்ந்து ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்தை பெற்று கொண்டு ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
அதன் பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்