கிருஷ்ணகிரி பகுதியில் மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி பகுதியில் மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கனிம வள உதவி பொறியாளர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் கணவாய்ப்பட்டி பெருமாள் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது அதில் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த மண் கணவாய்ப்பட்டி ஏரியில் இருந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரி பொன்னுமணி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதே போல காவேரிப்பட்டணம் அருகே வரட்டம்பட்டி பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு கேட்பாரற்று இருந்த லாரியை சோதனை செய்த போது அதில் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.