ஓசூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஓசூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார், மூக்கண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவரது பாக்கெட்டில் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மூக்கண்டப்பள்ளி காந்தி நகரை சேர்ந்த நாகராஜ் (வயது 19) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.