ஆம்பூரில் நகராட்சிக்கு வரி செலுத்தாத தனியார் பள்ளிக்கு சீல்
ஆம்பூரில் நகராட்சிக்கு வரி செலுத்தாத தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி சுமார் ரூ.5 லட்சம் செலுத்தால் நிலுவையில் இருந்தது. உடனடியாக வரியை செலுத்தும்படி எச்சரிக்கை செய்து நகராட்சி சார்பில் பள்ளிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் பள்ளி நிர்வாகம் வரியை செலுத்தவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையாளர் ஷகிலா தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று பள்ளிக்கு சீல் வைத்தனர்.