காரைக்குடி,
தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டம், கானாடுகாத்தான் கிளை தொடக்க விழா நேமத்தான் பட்டி பெரிய கோவில் வளாகத்தில் மாவட்டத் தலைவர் ராமசுவாமி தலைமை யிலும், ரமணி முன்னிலையிலும் நடந்தது. கானாடு காத்தான் கிளையின் கவுரவ தலைவராக ராஜப்பா, தலைவராக கமலநாதன், துணைத்தலைவராக ரமணி, பொதுச் செயலாளராக ரமேஷ் சிவம், பொருளாளராக ராஜாமணி, ஆலோசகராக சீனிவாசன், மகளிரணி செயலாளராக லலிதா சுப்புலட்சுமி, இளைஞரணி செயலாளராக மகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட தலைவர் ராமசுவாமி, மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், புதுகை மாவட்ட இளைஞரணி செய லாளர் பிரகாஷ் மற்றும் பலர் பேசினர். மாநில இளைஞரணி இணைச்செயலாளர் சவுரிராஜன், மாநில துணைத்தலைவரும் திருச்சி மாவட்டத்தலைவருமான நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் பள்ளத்தூர் குமார் நன்றி கூறினார்.