கொத்தடிமைத் தொழிலாளர்கள் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்

கொத்தடிமைத் தொழிலாளர்கள் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-20 17:26 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:- சிவகங்கை மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நட வடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 1800 4252 650 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே தொழிலாளர்கள் தங்கள் புகார்களை கட்டண மில்லா தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இலவச தொலைபேசி எண்ணில் தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்