வரும்முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம் தொடக்க விழா
வரும்முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
வடகாடு:
வடகாடு அருகேயுள்ள நெடுவாசலில் வரும் முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, அறந்தாங்கி சுகாதார பணி இணை இயக்குனர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் முன் காப்போம் திட்டத்தில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.