கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
விழுப்புரத்தில்வ கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் திருச்சி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் காந்திநகரை சேர்ந்த அப்துல்ரஹீம் மகன் முகமதுதாரிக் (வயது 21), சீனிவாசன் மகன் தசரதன் (வயது 21) ஆகியோர் என்பதும் 80 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.