10 கிலோ கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது

10 கிலோ கடல் அட்டைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-20 17:03 GMT
ராமநாதபுரம், 
தேவிபட்டிணம் கடற்கரை பகுதியில் சிலர் கடல் அட்டையை எடுத்துச் செல்வதாக ராமநாதபுரம் உயிரின பாதுகாவலர் ஜெகதீஷ் பகான் சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரின் உத்தரவின் பேரில் உதவி வனப்பாது காவலர் கணேசலிங்கம் வனச்சரகர் ஜெபஸ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் தேவிபட்டிணம் கடற்கரைக்கு சென்றனர்.வனத்துறையினரை கண்டதும் 3 மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த கடல் அட்டைகளை கடலுக்குள் வீசி எறிந்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்து சுமார் 10 கிலோ எடை யுள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.கடலில் வீசப்பட்ட அட்டைகளையும் வனத்துறையினர் கடலுக்குள் நீந்தி சேகரித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் திருப்பாலைக்குடி தெற்கு தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரின் மகன் ஹபீப் முகமது (வயது59), கீழக்கரை பருத்திக்காரத்தெரு செய்யது முகமது மகன் சுல்தான் அப்துல் காதர் (50), தேவிபட்டினம் மணல்வாடி தெரு செய்யது முகமது மகன் முகம்மது (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்