புதுப்பேட்டை அருகே சாராயம் விற்றவர் கைது

புதுப்பேட்டை அருகே சாராயம் விற்றவர் கைது

Update: 2022-03-20 16:55 GMT

புதுப்பேட்டை

புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது திருத்துறையூர் பஸ் நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருத்துறையூர் பகுதியை சேர்ந்த அய்யனார்(வயது 48) என்பதும், மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளுடன் 20 சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்