வேலூர் மார்க்கெட்டில் மீன் விலை அதிகரிப்பு

வரத்து குறைவு காரணமாக வேலூர் மார்க்கெட்டில் மீன் விலை அதிகரித்தது.

Update: 2022-03-20 16:39 GMT
வேலூர்

வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன. மேலும் இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதேபோன்று அதிகளவு மீன்கள் விற்பனையாகும். ஆனால் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாக காணப்பட்டது.

 மீன்மார்க்கெட்டிற்கு வந்த அசைவ பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்வகைகளை வாங்கி சென்றனர். பெரும்பாலான மீன்களின் விலை கடந்த வாரத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சிரம் மீன் ரூ.1,200-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட இறால் ரூ.380 முதல் ரூ.400-க்கும், ரூ.150-க்கு விற்கப்பட்ட அயிலைமீன் ரூ.200-க்கும் விற்பனையானது. சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ.150-க்கும், மத்தி ரூ.100 முதல் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையன்று வருவதைவிட மீன்கள் வரத்து குறைந்துள்ளது. அதனால் விலை திடீரென அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

3 காலம்.

மேலும் செய்திகள்