காட்டெருமை முட்டி தம்பதி படுகாயம்

போடி அருகே காட்டெருமை முட்டியதில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-20 16:16 GMT
போடி: 

போடி ஜக்கமநாயக்கன்பட்டி முதல்வர் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 47). இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு போடி அருகே உள்ள சின்னமுடக்கு பகுதியில் காபி தோட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி தங்கள் காபி தோட்டத்துக்கு பெரியாற்று-கோம்பை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு புதரில் மறைந்து இருந்த காட்டெருமை அவர்களை முட்டி தள்ளியது. இதில் வேல்முருகனும், தனலட்சுமியும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போடி வனத்துறையினரும், குரங்கணி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

படுகாயமடைந்த தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்