முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து அனைத்து வட்டார ஊர் ஜமாத்தார்கள் சார்பில் தியாகதுருகம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முத்தவல்லி அப்துல் சமது தலைமை தாங்கினார். முத்தவல்லிகள் சர்தார், சம்சுதீன், தாஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஹிஜாப் என்பது எங்கள் உரிமை அதை அனுமதிப்பது அரசின் கடமை, பறிக்காதே, பறிக்காதே, அரசியல் அமைப்பு வழங்கிய உரிமையை பறிக்காதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் சாதிக், முபாரக், சர்புதீன், மத்தீன் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முடிவில் நூர்முகமது நன்றி கூறினார்.