சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-20 16:13 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு பேசுகையில், சாலையில் செல்லும் போது செல்போன் பேசக்கூடாது, சாலையை கடக்கும்போது இருபுறங்களிலும் வாகனங்கள் வருகிறதா என்று பார்க்க வேண்டும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியவேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் நர்சிங் கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்