தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் தகவல்

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் தகவல்

Update: 2022-03-20 16:11 GMT

கடலூர்

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு, அதாவது தனிநபர்கள் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருைத 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடுவாரியத்தை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31.3.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்