முன்னாள் மருத்துவ மாணவர்கள் சந்திப்பு
கொடைக்கானலில் முன்னாள் மருத்துவ மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
கொடைக்கானல்:
மதுரை மருத்துவ கல்லூரியில் கடந்த 1971-ம் ஆண்டு மருத்துவ கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தி்ப்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதையொட்டி குளுமை கோடை பொன்விழா கூடல் 50 ஆண்டுகள் நட்பின் சங்கமம் என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் 3 நாட்களாக நடந்தன. இதில் மருத்துவ கல்லூரியில் படித்த 50 பேர் தங்களது குடும்பத்தினர் மற்றும் பேரன், பேத்திகளுடன் பங்கேற்றனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் அவர்கள் கட்டிப்பிடித்து ஆரத்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ நிபுணர்கள் உடுமலைப்பேட்டையை சேர்ந்த டாக்டர் சந்திரசேகரன், விழுப்புரம் டாக்டர் கேப்டன் ராமச்சந்திரன், கோவையை சேர்ந்த டாக்டர் ராஜபாண்டியன், பழனியை சேர்ந்த டாக்டர் செங்கோடன், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஜமேஷ் உள்பட பலர் செய்திருந்தனர்.