நாமக்கல்லில், போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 250 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாமக்கல்லில், போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 250 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Update: 2022-03-20 15:12 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில் நாமக்கல் சரக காவல்துறை சார்பில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாமக்கல்லில் நடத்தப்பட்டது. இந்த முகாமுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் நாமக்கல், நல்லிபாளையம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, மோகனூர், சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான பிரச்சினைகளை மனுக்களாக கொடுத்தனர். இந்த மனுக்களுக்கு அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி தீர்வு கண்டனர்.
மொத்தமாக இந்த முகாமில் சுமார் 250 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் அந்தந்த போலீஸ் நிலையங்களிலேயே இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கூறினார்.

மேலும் செய்திகள்