தூய்மை பணியில் களமிறங்கிய கிராம மக்கள்

தூய்மை பணியில் களமிறங்கிய கிராம மக்கள்

Update: 2022-03-20 13:11 GMT
அவினாசி, 
 அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிகுட்பட்ட வெள்ளியம்பாளையம், நாதம் பாளையம், கந்தம்பாளையம், தாசம்பாளையம், ஸ்ரீராம்நகர், மகாலட்சுமி நகர், உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை உள்ளது. இதனால் விடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து அதிக அளவில் குப்பை, தேவையற்ற கழிவுப்பொருட்கள் வீதியில் கொட்டப்படுகிறது. எனவே ஸ்ரீராம்நகர் குடியிருப்புவாசிகள் நேற்று ஒன்றினைந்து வீதிகளில் தேங்கி கிடந்த குப்பை, பிளாஷ்டிக் பொருட்கள், படர்ந்து புதர்மண்டி கிடந்த செடிகொடிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து குடியிருப்பவர்கள் கூறுகையில் “ஊரட்சி நிர்வாகமே அனைத்து சுகாதார பணிகளையும் அனைத்து பகுதிகளிலும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட்டு நம் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருப்பதில் நமக்கும் பங்கு உள்ளது. எனவே எங்கள் பகுதியினர் அனைவரும் ஒன்றினைந்து நமக்கு நாமே என்கிற கருத்தை மனதில்கொண்டு சுகாதாரப்பணி மேற்கொண்டுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றனர்.

மேலும் செய்திகள்