பக்தர்கள் பாதயாத்திரை

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

Update: 2022-03-20 12:30 GMT
 தொண்டி, 
காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இக் கோவில் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் திருவாடானை தாலுகாவில் உள்ள 200- க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கலந்து கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இந்த ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்த பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டிருந்தனர். அவரைத் தொடர்ந்து சுமார ்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் செவ்வாடை அணிந்து கொல்லங்குடி வெட்டுடையார் காளி யம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டு் சென்றனர். 

மேலும் செய்திகள்