நூலகத்தில் திருட்டு

நூலகத்தில் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-20 12:18 GMT
தொண்டி, 
தொண்டியில் செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூலகராக தொண்டி சத்திரம் தெருவில் வசித்து வரும் அய்யலோ (வயது 52) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம் போல் நூலகத்தை பூட்டி விட்டு இவரது சொந்த ஊருக்கு சென்று விட்டாராம். சம்பவத்தன்று நூலகத்திற்கு சென்றபோது நூலகத்தின் பூட்டு திறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 2 கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இதுகுறித்து அவர் தொண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்