கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி ஏற்பட்ட பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் இந்த மாற்றம் ஏற்படுகிறது. அதாவது கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு மற்றும் நீர்மட்டம் ஏற்றம், இறக்கம் ஆகியவை நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கன்னியாகுமரியில் கடல் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்வாங்கியது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.
----