மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-19 21:37 GMT
பாடாலூர்:

மருத்துவ மாணவி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மகள் வர்ஷா (வயது 21). இவர் மதுரையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் வர்ஷா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
மேலும் இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வர்ஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்