காரில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சலில் காரில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

Update: 2022-03-19 21:25 GMT
நாகர்கோவில்:
குளச்சலில் காரில் கடத்திய 300 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று குளச்சல் சைமன்காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சிறு சிறு மூடைகளில் 300 கிலோ ரேஷன் அரிசியைகடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
 இதனைத்தொடர்ந்து காருடன் அரிசியை பறிமுதல் செய்து, கார் டிரைவர் நித்திரவிளையை சேர்ந்த பபிஷ் (வயது40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
---

மேலும் செய்திகள்