மரத்தில் மோதி கார் தீப்பிடித்தது; 3 பேர் உடல்கருகி சாவு

கதக் அருகே மரத்தில் மோதி கார் தீப்பிடித்தது; 3 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

Update: 2022-03-19 21:19 GMT
கதக்:

கதக் மாவட்டம் ரோன் டவுன் பகுதியில் நேற்று மதியம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் சாலையோரமாக இருந்த மரத்தில் மோதியது. இதில் அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் ஒருவர் காரில் இருந்த 4 பேரை மீட்க முயன்றார். ஆனால் அவரால் ஒருவரை மட்டும் தான் பலத்த தீக்காயத்துடன் மீட்க முடிந்தது. மற்ற 3 பேரையும் மீட்க முடியவில்லை.

  இதுபற்றி அறிந்த ரோன் தீயணைப்பு படையினர் அங்கு சென்று காரில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் காருக்குள் இருந்த 3 பேரும் உடல்கருகி இறந்து விட்டனர். அவர்களது உடல்களை ரோன் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் பெயர், விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ரோன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்