குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது

குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-19 21:13 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பாடாலூர் போலீஸ் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய லாடபுரம் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகுமார் என்ற பழனிச்சாமி (வயது 20), மருவத்தூர் போலீஸ் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய கோவை மாவட்டம், பொள்ளாச்சி அங்காளக்குறிச்சி, ஜே.ஜே.நகரை சேர்ந்த பெரியசாமி மகன் தினேஷ்குமார் (22) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை கைது செய்த தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் அவரது குழுவினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டினார்.

மேலும் செய்திகள்