டாஸ்மாக் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

கடையம் அருகே டாஸ்மாக் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-19 20:31 GMT
கடையம்:
கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடையில் மேற்பார்வையாளராக செல்வராஜ் என்பவர் பணியில் இருந்தார். கடையம் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் அன்பழகன், புறங்காட்டா புலியூரை சேர்ந்த இசக்கிமுத்து, கடையம் பாரதிநகரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் மதுக்கடைக்கு சென்று செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து செல்வராஜ் கடையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அன்பழகன், இசக்கிமுத்து, கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அன்பழகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்