அய்யப்பன் கோவிலில் வருடாபிஷேக விழா

ஆலங்குளத்தை அருகே வி.புதூரில் அய்யப்பன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2022-03-19 20:05 GMT
ஆலங்குளம், 
ராஜபாளையம்-ஆலங்குளம் நெடுஞ்சாலையில் வி.புதூர் உள்ளது. இங்குள்ள பிரசித்திபெற்ற அய்யப்பன் கோவிலில் மகரபூஜை, மண்டல பூஜை, மாதாந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த கோவிலில் நடை திறக்கப்பட்டு வருடாபிேஷக பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்து இருந்தது. முன்னதாக உஷபூஜைகள், அத்தாழ பூஜை, படிபூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சத்திரப்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வி.புதூர், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வி.புதூர் அய்யப்ப சேவா சங்க அன்னதான டிரஸ்டி தலைவர் சத்திரப்பட்டி குருநாதர் சுந்தரராஜன், தொழிலதிபர் காசிவிஸ்வநாதன், டிரஸ்டி நிர்வாகிகள் புதூர் முனியாண்டி, சுப்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்