தீக்குளித்து பெண் தற்கொலை
ராஜபாளையம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மனைவி ராமலட்சுமி (வயது 36). இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ராமலட்சுமி மண் எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.