மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

Update: 2022-03-19 19:57 GMT
துவரங்குறிச்சி, மார்ச்.20-
துவரங்குறிச்சி அருகே உள்ள கல்லுபட்டியைச் சேர்ந்தவர் கருத்தமணி (வயது 70). இவர் மேனிவயல் பிரிவு சாலை அருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும்போது மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்