சோளத்தட்டை தீயில் எரிந்து நாசம்
நொய்யல் அருகே ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டை தீயில் எரிந்து நாசமானது.
நொய்யல்,
நொய்யல் அருகே வேலம்பாளையம் கிரசர் மேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). இவர் கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காக வீட்டின் அருகே சோளத்தட்டைகளை போட்டு வைத்திருந்தார். நேற்று மதியம் சோளத்தட்டைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும், அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இருப்பினும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டை தீயில் எரிந்து நாசமானது.