ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
வள்ளியூர் அருகே ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் இருக்கன்துறை பஞ்சாயத்து சங்கநேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி தொடக்க விழா நடந்தது. இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவர் இந்திரா முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், இருக்கன்துறை பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜெயலட்சுமி, உறுப்பினர்கள் பேச்சியம்மாள், அர்ச்சுணன், ரேவதி, செல்லம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.