வங்கியில் இருந்து பேசுவதாககூறி ரூ.57 ஆயிரம் மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.57 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-19 19:34 GMT
திருச்சி, மார்ச்.20-
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.57 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி கணக்கு
திருச்சி இனாம்புலியூர் பகுதியை சோ்ந்தவர் முத்து (வயது 30). இவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, முத்துவின் வங்கி கணக்கு தொடா்பான தகவல்களை பெற்றுக் கொண்டார். தங்களது கே.ஒய்.சி.கிரிடெட் கார்டை புதுப்பிக்க வேண்டும் என கூறினார்.
அதைத்தொடர்ந்து ஓ.டி.பி.நம்பர் முதற்கொண்டு அனைத்து தகவல்களையும் தெரிவித்தார். அதன்பின் முத்துவின் வங்கி கணக்கில் இருந்து முதலில் 50 ஆயிரம் ரூபாயும், அதனை தொடர்ந்து 5ஆயிரம் ரூபாயும், அதன்பிறகு 2 ஆயிரம் ரூபாயும் 3 தவணைகளாக எடுக்கப்பட்டது.
போலீசில் புகார்
இதைத்தொடர்ந்து மர்ம நபரால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்து, மோசடி தொடர்பாக மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்