கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
ேமட்டூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
மேட்டூர்:-
ேமட்டூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
கணவன்-மனைவி
மேட்டூர் அருகே உள்ள தேங்கல்வாரை பகுதியை சேர்ந்தவர் சின்னையன் (வயது 75). இவர் மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜெயம்மாள் (65). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் கணவன்-மனைவி 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிைலயில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னையனுக்கு திடீெரன்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சின்னையன் திடீரென இறந்தார். இதனால் ெஜயம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அவர் கணவர் மீது அளவுக்கு அதிகமாக பாசம் ைவத்திருந்ததால் மிகவும் கவலையுடன் இருந்தார்.
மனைவியும் சாவு
இதனிடைேய சின்ைனயன் இறந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே அவருடைய மனைவி ஜெயம்மாளும் உயிரிழந்தார். இதைப்பார்த்த அவர்களுைடய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாவிலும் இணைபிரியாத தம்பதியை பார்த்து நெகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களும் அருகருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.