கறம்பக்குடி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு அண்ணன் கைது

விவசாயியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-19 18:39 GMT
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதி வடக்குத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் இயலரசன் (வயது 52), கலைச்செல்வம் (45) விவசாயிகளான இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சகோதரர்கள் இருவருக்கும் இட பங்கீடு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இயலரசன் அவரது தம்பி கலைச்செல்வத்தை தாக்கி அரிவாளால் வெட்டினார். இதில் இடது கழுத்தில் பலத்த காயமடைந்த கலைச் செல்வம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கலைச் செல்வத்தின் மனைவி பாலாமணி மழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு இயலரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

மேலும் செய்திகள்