சாலையை ஆக்கிரமித்துள்ள மரக்கிளைகள்

திருவாளப்புத்தூர் அருகே சாலையை ஆக்கிரமித்துள்ள மரக்கிளைகள் அகற்ற வேண்டும்.

Update: 2022-03-19 18:32 GMT
மணல்மேடு:
மணல்மேடு அருகே திருவாளப்புத்தூர் முதல் நடுதிட்டு வரை சாலையை ஆக்கிரமித்துள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரக்கிளைகள் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சாலையின் திருப்பத்தில் மரக்கிளைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம், காட்டுமன்னார்குடி  உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள், அலுவலகம் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இந்த சாலை வழியாக செல்லும் போது மரக்கிளைகளால் காயம் அடையும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்