பாம்பாளம்மன் கோவிலில் பங்குனி உத்திர விழா
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பாம்பாளம்மன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே கருப்பூர் கிராமத்தில் உள்ள பாம்பாளம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது.
பின்னர் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் முருகன் காவடி வீதி உலா நடந்தது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சக்தி கரகம், அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று அதிகாலை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.